வன்முறைகளை நியாயப்படுத்த முடியாது!! -ட்ரம்பின் முகத்தில் அறைந்தால் போல் இறுதி உரையாற்றிய மனைவி மெலெனியா-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்று செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையும் நிலையில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளை புதன் கிழமை பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், இறுதி உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவியும் முதல் பெண்மணியுமான மெலெனியா ட்ரம்ப், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் தாதியர்கள், மருத்துவர்கள், சுகாதார வல்லுநர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.