SuperTopAds

20 மில்லியன் ரூபாய்க்கு வலம்புரி சங்கை விற்க முயன்ற 6 பேர் கொண்ட கும்பல் அதிரடிப்படையினால் கைது..!

ஆசிரியர் - Editor I

20 மில்லியன் ரூபாய்க்கு வலம்புரி சங்கு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற 6 பேர் கொண்ட கும்பல் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய சொகுசு ஜீப்பொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீதுவ பகுதியில் பயன்பாட்டுக்கு உதவாத 

29 ஆயிரம் கிலோ கிராம் தேயிலை தூளுடன் எழு பேரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.