இலங்கை முழுவதும் 7 ஆயிரம் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ துரித நடவடிக்கை..!
இலங்கை முழுவதும் கிராம மட்டத்தில் 7 ஆயிரம் சிறிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு மின்சாரசபை திட்டமிட்டிருக்கின்றது.
4 வருடங்களுக்குள் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ முடியும் இலங்கை மின்சார சபையின் தலைவர், பொறியியலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதனூடாக 100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.