பாண் மற்றும் பணிஸ் விலை 10 ரூபாவால் அதிகரிக்கும்..! இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் விளக்கம்..
பேக்கரி தயாரிப்புக்களுக்கான மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பாண், பணிஸ் உள்ளிட்டவற்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் எம்.கே.ஜயவர்த்தன கூறியுள்ளார்.
பார்ம் எண்ணெய்க்கு ஒரு லீற்றருக்கு 250 ரூபா வரி அறவிடப்படும் நிலையில், அதன் விலை 500 ரூபாவாகவும், மாஜரின் ஒரு கிலோவுக்கு 600 ரூபா வரி அறவிடப்படும் நிலையில் 1000 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளதால் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்காமல் இருப்பது சாத்தியமற்றது என தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பேக்கரி பண்டங்களின் விலையை அதிகரிக்காமல் இருக்க, சலுகைகளை க்கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கோரிக்கைகளை முன்வைத்த போதும் அவர்கள் அதற்கான எந்த பதில்களையும் இதுவரை வெளிப்படுத்தாமையால்,
பேக்கரி பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன சுட்டிக்காட்டினார்.