உலகளவில் 9.49 பேருக்கு கொரோனா!! -6.77 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்-

ஆசிரியர் - Editor II
உலகளவில் 9.49 பேருக்கு கொரோனா!! -6.77 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர்-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 6.77 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போது கொரோனாவின் 2 ஆவது  ஆலை தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,49,21,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இருந்து இதுவரை 6,77,57,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றினால் 20 இலட்சத்து 29 ஆயிரத்து 632 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுமட்டுமல்லாமல் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,51,34,404 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 1,11,601 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு