இலங்கையில் கொடிகட்டி பறக்கும் இணையதளம் ஊடான விபச்சாரம்..! 235 பெண்களை கைது செய்ய விசேட நடவடிக்கை, 20 பேர் இதுவரை கைது..
இணையதளம் ஊடமாக விபச்சாரம் செய்யும் குற்றச்சாட்டில் 235 பெண்களை கைது செய்வதற்கு விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.டப்ளியூ. புஷ்பகுமாரவின் ஆலோசனைக்கு அமைய
மேல் மாகாண உளவுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இதுவரையில் குறித்த நடவடிக்கையில்
விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 20 பெண்கள் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண உளவுப் பிரிவின் பொறுப்பதிகாரி
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜே.ஆர். லக்ஷமன் தெரிவித்துள்ளார்.