SuperTopAds

டிரம்பின் பதவி நீக்க தீர்மானத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு!! -அவரின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு-

ஆசிரியர் - Editor II
டிரம்பின் பதவி நீக்க தீர்மானத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு!! -அவரின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஆதரவு-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பதவி நீக்க தீர்மானத்திற்கு பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள்  டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கினர். டிரம்பின் குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து டிரம்பிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். 

அமெரிக்க ஜனாதிபதி வரலாற்றில் இருமுறை தகுதி நீக்க தீர்மானத்தை எதிர்கொண்டிருக்கும் முதல் அதிபர் என்ற சோகமான சாதனையை டிரம்ப் பெற்றுள்ளார்.