முன்னணி நடிகைக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
முன்னணி நடிகைக்கு கொரோனா!!

தெலுங்கில் பிரபலமான நடிகை அனுசுயா பரத்வாஜ்க்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:- 

எனக்கு கொரோனா வைரசுக்கான அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன். தற்போது என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். 

கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள் என்றுள்ளார். 


Radio