மாயமான இந்தோனேசியாவில் விமானம்!! -மனித உடல் பாகங்கள், சிக்னல்கள், உடைந்த துண்டுகள் மீட்பு-
காணாமல் போன இந்தோனேசியாவில் விமானத்தின் சிக்னல்கள், ஒரு மீட்டர் நீள விமான துண்டு பொருட்கள், சக்கரம் மற்றும் மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து நேற்று சனிக்கிழமை போண்டியானாக் பகுதிக்கு புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்பட்டுச் சென்ற 4 நிமிடங்களிலேயே 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துள்ளது.
விமானத்தில் அந்நாட்டைச் சேர்ந்த 46 பெரியவர்கள், 7 குழந்தைகள், 3 கைக்குழந்தைகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் இருந்தனர்.
இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் தேடுதல் பணியை ஆரம்பித்தனர். ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர்.
மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது. மேலும், விமானத்தில் பயணித்தவர்களை ஜகார்த்தா விரிகுடாவில் தேடும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.