SuperTopAds

ட்ரம்பின் அமைச்சரவையில் இருந்து பலர் விலக முடிவு!! -முதலாவதாக கல்வி, போக்குவரத்து செயலாளர்கள் ராஜினாமா-

ஆசிரியர் - Editor II
ட்ரம்பின் அமைச்சரவையில் இருந்து பலர் விலக முடிவு!! -முதலாவதாக கல்வி, போக்குவரத்து செயலாளர்கள் ராஜினாமா-

அமெரிக்க பராளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து அவரின் அமைச்சரவையிலிருந்து கல்வி மற்றும் போக்குவரத்து அமைச்சுக்களில் செயலாளர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

மேலும் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் அமெரிக்கவின் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றளிக்கும் நடவடிக்கை நேற்று முன்தினம் அமெரிக்க பாராளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்றக் கட்டத்துக்குள் புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று ட்ரம்ப் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளராக இருந்த எலானி சாவோ, கல்வி அமைச்சின் செயலாளரான பெஸ்டி தேவாஸ் ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன், ட்ரம்பின் அமைச்சரவையில் இருந்து மேலும் பலர் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.