SuperTopAds

டிரம்ப்பை பதவியில் இருந்து தூக்குங்கள்!! -இல்லையேல் சட்டம் பாயும் எச்சரிக்கும் சபாநாயகர் பெலோசி-

ஆசிரியர் - Editor II
டிரம்ப்பை பதவியில் இருந்து தூக்குங்கள்!! -இல்லையேல் சட்டம் பாயும் எச்சரிக்கும் சபாநாயகர் பெலோசி-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்கவில்லையெனில் நீதி விசாரணையை சந்திக்க நேரிடும் என அமைச்சரவைக்கு சபாநாயகர் பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றி பெற்றார். எதிர்வரும் 20 ஆம் திகதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் பாராளுமன்றம் முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டம் கலவரமாக மாறியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதன் போது 4 பேர் கொல்லப்பட்டனர். பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் உயிரிழந்தார். 

இந்நிலையில், அவையின் சபாநாயகரான கலிபோர்னியாவை சேர்ந்த நான்சி பெலோசி மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த செனட்டர் சக் சூமெர் ஆகியோர், அதிபர் டிரம்பை பதவியில் இருந்து நீக்குவதற்கான 25வது திருத்தத்தினை அமல்படுத்தும்படி துணை அதிபர் மைக் பென்சிடம் கூறினர்.

ஒருவேளை இந்த நடவடிக்கையை எடுக்க பென்ஸ் மறுத்து விட்டால், ஜனநாயக கட்சியினர் 2வது முறையாக டிரம்ப் மீது கிரிமனல் குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய தயாராக உள்ளனர் என அமைச்சரவைக்கு பெலோசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.