பிரதான தபாலகத்திற்குள் இருந்து சுமார் 18 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு..! பெல்ஜியத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பட்டுள்ளது. பெறுமதி 135 மில்லியன்..
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது வளர்ப்பு பிராணிகளுக்கான தீவன பொதியில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 18 ஆயிரம் போதை மாத்திரைகள் சுங்க பிரிவினரால் மீட்கப்பட்டிருக்கின்றது.
சுமார் 135 மில்லியன் பெறுமதியான குறித்த போதை மாத்திரைகள் பெல்ஜியத்திலிருந்து வளர்ப்பு பிராணிகளுக்கான தீவன பொதிகளில் அடைக்கப்பட்டு இலங்கைக்குள் கொண்டுபரப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது.