SuperTopAds

கொரோனா தடுப்பூசி போட்ட பெண் 2 நாட்களில் திடீரென உயிரிழப்பு!!

ஆசிரியர் - Editor II
கொரோனா தடுப்பூசி போட்ட பெண் 2 நாட்களில் திடீரென உயிரிழப்பு!!

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பெண் ஒருவர் 2 நாட்களின் பின்னர் திடீரென உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

போர்ச்சுகல் நாட்டில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. முன்கள ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அந்நாட்டின் போர்ட்டோ நகரில் உள்ள வைத்தியசாலையில் சுகாதாரத்துறை ஊழியராக பணியாற்றி வந்த சோனியா அக்விடோ என்ற 41 வயது பெண்ணுக்கு கடந்த 30 ஆம் திகதி பைசர் நிறுவன தடுப்பூசி போடப்பட்டது.

பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அந்த பெண்ணுக்கு எந்த ஒரு விதமாக உடல்நலக்குறைவும், பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருந்தது.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 நாட்கள் கழித்து (48 மணி நேரம்) சோனியா கடந்த முதலாம் திகதி திடீரென உயிரிழந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது தந்தை வீட்டிற்கு வந்திருந்த சோனியா எந்தவித உடல்நலக்குறைவுக்கும் உள்ளாகாமல் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த சோனியாவின் உடலை கைப்பற்றிய போச்சீகல் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர்.