யாழ்.குருநகருக்கு நீர்கொழும்பிலிருந்து வந்தவரால் பதற்றம்..! பொறுப்பேற்க பொலிஸார், சுகாதார பிரிவு மறுப்பு..

ஆசிரியர் - Editor I

யாழ்.குருநகருக்கு நீர்கொழும்பிலிருந்து வருகைதந்த்து துறைமுகத்தில் படுத்துறங்கிய நபரினால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகின்றது

நீர்கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிங்கள மொழி பேசும் ஓருவர் அப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக படுத்துறங்குவது 

மீனவர்களால் அவதானிக்கப்பட்டு பொதுச் சுகாதார உத்தியோகத்தர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இரு தரப்பும் வருகை தந்தபோதும் 

இனம் தெரியாதவரை அழைத்துச் செல்ல இரு தரப்பும் மறுத்து விட்டனர். இருப்பினும் சுகாதார உத்தியோகத்தர்கள் உடனடியாக அவரது மாதிரியை பெற்று பி.சி.ஆர் பரிசோதணைக்கு அனுப்பி வைத்தபோதும் அவரை கைது செய்ய பொலிசாரும் மறுத்து விட்டனர். 

இதனால் அப் பகுதியின் ஊடாக மீன் பிடிப் படகுகள் செல்வது தடுக்கப்பட்டு பிறிதொரு பகுதியின் ஊடாக அனுமதிக்கப்பட்டது.

இவ்வாறு பி.சி.ஆர் பெறப்பட்ட நீர்கொழும்பு வாசி தற்போது குருநகர்ப் பகுதியில் ஓர் தனியான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ள  நிலையில் இன்று இரவு வெளிவரும் பி.சி.ஆர் பரிசோதனையில் 

கொரோனா உறுதி செய்யப்பட்டால் வைத்தியசாலைக்கும் தொற்று இல்லையேல் தொடர்ந்தும் பயணிக்க அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு