பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக நப்கின்களை வழங்களை கல்வியமைச்சு தீர்மானம்..! பின்னால் உள்ள அதிர்ச்சி தகவல்..
பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக நப்கின்களை வழங்கவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்திருக்கின்றது.
அதற்குரிய முன்மொழிவு விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் நடத்திய ஆய்வில் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலப்பகுதியில் 1.2 மில்லியன் மாணவிகள் பாடசாலை செல்வதை தவிர்ப்பதாக கண்டறியப்பட்டது.
இதன்படி பாடசாலைகளில் படிக்கும் 65% சிறுமிகள் முறையான சுகாதார நாப்கின்களை பாவிப்பதில்லை என்றும்,
ஏனெனில் அவை கிராமப்புற மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குரிய விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை எனவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இலவச நாப்கின்கள் வழங்கும் முறையை அரசாங்கம் முன்னெடுக்க திட்டமிட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.