கொத்து ரொட்டி, பிறைட் றைஷ் உள்ளிட்ட துரித உணவுகளை தவிருங்கள்..! சுகாதார பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I

கொத்து ரொட்டி, பிரைட் றைஷ் உள்ளிட்ட துரித உணவுகளை தவிர்க்குமாறு குறித்த உணவுகளால் இலங்கையர்களிடம் நோய் எதிர்ப்பு எக்தி குறைந்து வருவதாகவும் சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலீகா மலவிகே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். கொத்து, ப்ரைட் ரைஸ், ஷொட்டிஸ் உள்ளிட்ட அவசர உணவு (Fast Food) வகைகளை உட்கொள்வதன் ஊடாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கொவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அத்தியாவசியமானது எனவும் அவர் தெரிவிக்கின்றார். உடற்பயிற்சிகளை மேற்கொள்வதுடன், உரிய வகையில் நித்திரை கொள்வது கட்டாயமானது எனவும் பேராசிரியர் நிலீகா மலவிகே குறிப்பிடுகின்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு