கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 25 மாவட்டங்களுக்கும் 25 இராணுவ அதிகாரிகள் நியமனம்..
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கொவிட் -19 கட்டுப்பாட்டு பணிகளுக்காக 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதியும், கொவிட் தடுப்பு தேசிய செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் சிபார்சின் பெயரில் ஜனாதிபதி செயலம் நியமனம் செய்துள்ளது.
பதவி உயர்வு பெற்ற பின்னர் இராணுவத் தலைமையகத்தில் அவர் கௌரவிக்கப்பட்ட தினத்தில் இந்த புதிய பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,
ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று அனைத்து மாவட்டங்களுக்குமான 25 தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
அதன்படி, அந்த தலைமை ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் புதிய நியமனங்கள் மாவட்ட ரீதியான தனிமைப்படுத்தல் மையங்களை சீராக நடத்துவதற்கும்,
தனிமைப்படுத்துவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தனிநபர்களின் போக்குவரத்து, மருத்துவம், உபகரணங்கள், உலர் உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள்
மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் மற்றும் பிற தொழில்நுட்ப தேவைகள் என்பவற்றை சீராக முன்னெடுப்பதற்காகும்.
அனைத்து 25 மாவட்டங்களிலும் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் பின்வருமாறு;
வட மாகாணம்
1. மேஜர் ஜெனரல் W G H A S பண்டார - யாழ்ப்பாணம்
2. மேஜர் ஜெனரல் கே என் எஸ் கொட்டுவேகொட – கிளிநொச்சி
3. மேஜர் ஜெனரல் ஆர் எம் பி ஜே ரத்நாயக்க - முல்லைத்தீவு
4. மேஜர் ஜெனரல் W L P W பெரேரா - வவுனியா
5. மேஜர் ஜெனரல் A A I J பண்டார - மன்னார்
வட மத்திய மாகாணம்
6. மேஜர் ஜெனரல் ஜே சி கமகே – பொலன்னறுவை
7. மேஜர் ஜெனரல் எச் எல் வி எம் லியனகே - அனுராதபுரம்
வட மேல் மாகாணம்
8. மேஜர் ஜெனரல் A P I பெர்னாண்டோ - புத்தளம்
9. பிரிகேடியர் பி எம் ஆர் எச் எஸ் கே ஹெரத் – குருனாகலை
மேல் மாகாணம்
10. மேஜர் ஜெனரல் கே டபிள்யூ ஆர் டி அப்ரூ - கொழும்பு
11. மேஜர் ஜெனரல் என் ஆர் லமாஹேவகே - கம்பஹா
12. பிரிகேடியர் கே என் டி கருணபால - களுத்துறை
மத்திய மாகாணம்
13. மேஜர் ஜெனரல் எச் பி என் கேஎ ஜேயபதிரன – நுவரரெலியா
14. மேஜர் ஜெனரல் எஸ் எம் எஸ் பி பி சமரகோன் - கண்டி
15. மேஜர் ஜெனரல் S U M N மாணகே – மாத்தளை
சப்ரகமுவ மாகாணம்
16. பிரிகேடியர் ஜே எம் ஆர் என் கே ஜெயமண்ண – இரத்னபுரி
17. பிரிகேடியர் எல் எ ஜே எல் பி உடுவிட்ட – கேகாலை
கிழக்கு மாகாணம்
18. மேஜர் ஜெனரல் சி டி வீரசூரிய - திருகோணமலை
19. மேஜர் ஜெனரல் டி டி வீரகூன் – அம்பாறை
20. மேஜர் ஜெனரல் சி டி ரணசிங்க - மட்டக்களப்பு
ஊவா மாகாணம்
21. பிரிகேடியர் இ எ பி எதிரிவீரா – பதுள்ளை
22. கர்ணல் டி யு என் சேரசிங்க – மொனராகலை
தென் மாகாணம்
23. மேஜர் ஜெனரல் டி எம் எச் டி பண்டார – ஹம்பாந்தோட்டை
24. மேஜர் ஜெனரல் W A S S வனசிங்க - காலி
25. கர்னல் கே எ யு கொடிதுவக்கு – மாத்தறை