உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 2600 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை..! பயண ஒழுங்குகளில் அரசு தீவிரம்..
இலங்கை விமான நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து மேலும் 2600 சுற்றுலா பயணிகள் மீண்டும் இலங்கை வரவுள்ளனர்.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் இணைந்து மீள சுற்றுலாத் துறையை ஏற்படுத்துமுகமாக ஒரு மாத பைலட் திட்டத்தில்
உக்ரைனிலிருந்து சுமார் 2600 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர உள்ளனர், இவர்கள் ஜனவரி 19 ஆம் திகதி வரை என்று
சிவில் விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த தகவலை கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 முதல் தொடங்கப்பட்ட பைலட் திட்டம் ஏற்கனவே 300 க்கும் மேற்பட்ட உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளை வரவேற்கப்பட்டுள்ளனர்.
இதில் 6 பேருக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருக்கும் ஹொட்டல்களில் அமைக்கப்பட்ட மையங்களில்
சிகிச்சை பெற்று வருகின்றனர்.எனினும் இந்த திட்டத்தில் எதவும் நிறுத்தமும் இருக்காது என்று அதிகாரிகள் கூறியுள்ள நிலையில்,
10 விமானங்கள் ஜனவரி 19 வரை உக்ரேனியர்களை அழைத்துவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இதன் விளைவாக கிட்டத்தட்ட 2600 சுற்றுலா பயணிகள் அழைத்துவரப்படவுள்ளனர். மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன்,
சுற்றுலாப் பயணிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், பின்னர் அவர்கள் ஹொட்டல்களுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்,
அங்கு அவர்கள் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். ஏழாம் நாளில், இவர்களுக்கு மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும்,
அனைத்து அறிக்கைகளும் தொற்று எதுவும் இல்லை என்ற பின்னரே தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்க முடியும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தங்கள் இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது தங்கள் ஹொட்டல்களை விட்டு வெளியேறவோ
அல்லது பேருந்துகளில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். பயண திட்டதின் ஒரு பகுதியாக,
சுற்றுலாப் பயணிகள் பெந்தோட்ட, கொக்கல, பேருவளை மட்டுமே பார்வையிட முடியும்.சிவில் ஏவியேஷன் வட்டாரங்களில்,
உக்ரேனிலிருந்து ஒழுங்குசெய்யப்பட்டு வரும் சுற்றுலாபயணிகளின் விமானங்களுக்கு மேலதிகமாக, வேறு ஏதேனும் ஒரு விமான நிறுவனம்
ஒரு சுற்றுப்பயணக் குழுவுடன் இங்கு தரையிறங்க விரும்பினால், சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி பெற்றவுடன் மட்டுமே
அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் விமான நிலையங்களை மீண்டும் திறக்க முடிந்தால்,
தற்போதைய நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும். ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க பைலட் திட்டத்தின் கீழ் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஏற்பாடு செய்வதில் முன்னணியில் உள்ளார்,