SuperTopAds

கொரோனா தொற்றுடன் சிகிச்சை நிலையத்திலிருந்து 5 கைதிகள் தப்பி ஒட்டம்..! அதிகாலை முதல் பொலிஸார், படையினர் உசார் நிலையில்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பொலன்றுவை கலெல்ல சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த 5 கைதிகள் இன்று அதிகாலை தப்பி ஓடியுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

குறித்த கைதிகள் நீர்கொாழும்பு  சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு மாற்றப்பட்டவர்களாவர்.

கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அவர்களை கண்டுபிடிப்பதற்காக 

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரால் கலெல்ல மற்றும் பொலன்னறுவை பகுதிகளில் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 

பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். தப்பியோடிய கைதிகள் 22 முதல் 52 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.