ஒக்ஸ்போர்டின் அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசி பாவனைக்கு இங்கிலாந்து அனுமதி!!
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த இங்கிலாந்து இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
அந்நாட்டில் பைசர், மொடர்னா தடுப்பூசிகளைத் தொடர்ந்து மூன்றாவது தடுப்பூசியாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி ஜனவரி 4 ஆம் திகதி முதல் பொதுப் பயன்பாட்டக்கு வரும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.