யாழ்ப்பாணம் - கொழும்பு இ.போ.ச பேருந்து மயிரிழையில் விபத்திலிருந்து தப்பியது..! திடீரென வீதியின் குறுக்கே விழுந்த மரம்..

ஆசிரியர் - Editor I

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து பாரிய விபத்திலிருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு வவுனியா - பேயாடி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

குறித்த பகுதியில் நின்றிருந்த பழைமையான புளிய மரம் நேற்றிரவு 8 மணியளவில் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தையும் சேதப்படுத்திக் கொண்டு 

ஏ – 9 பிரதான வீதியின் குறுக்காக விழுந்தது. அவ்வேளையில் அவ்வீதியால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச. பஸ் ஒன்றும் பயணித்திருந்தது. 

எனினும், மரம் முறிந்து விழுவதை அவதானித்த பஸ்ஸின் சாரதி விரைந்து செயற்பட்டு பஸ்ஸை வீதியின் கரையால் செலுத்தியமையால் 

பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.குறித்த விபத்தால் ஏ – 9 வீதியுடனான போக்குவரத்து நேற்றிரவு ஒரு மணி நேரம் தாமதமடைந்திருந்தது.

இதனையறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் கடந்த சில நாள்களாக மழையுடனான காலநிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு