SuperTopAds

மார்ச் மாதத்தின் பின் முதலாவது சுற்றுலா பயணிகள் குழு நாட்டுக்கு வருகை..! அமோக வரவேற்பளித்த அரசு..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் கொரோனா தொற்று அபாயத்தினால் கடந்த மார்ச் மாதம் விமான நிலையங்கள் பூட்டப்பட்டது.

இதன் பின் வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான விமான சேவைகள் மட்டும் நடைபெற்றுவந்தது. 

இந்நிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் இயல்பு நிலைக்கு திரும்புதல் போன்றவற்றுக்காக நேற்று முன்தினம் 26ம் திகதி விமான நிலையங்கள் திறப்பட்டது. 

இதனை தொடர்ந்து மார்ச் மாதத்தின் பின்னர் முதலாவது சுற்றுலா பயணிகள் குழுவாக உக்ரைன் நாட்டிலிருந்து 185 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். 

உக்ரைன் ஸ்கை அப் எயர்லைன்ஸின் பி.கி.யூ 555 விமானம் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 

எதிர்வரும் நாள்களில் ரஷ்யாவிலிருந்து 2 ஆயிரத்து 580 சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கைக்கு வந்த உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் குழுவிடம் நாட்டுக்கு வருகை தருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு 

பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு முன்பு அவர்களிடம் மற்றொரு பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரிடம் அடுத்த 07 நாள்களில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படும்.

அவர்கள் 10 நாள்கள் இலங்கையில் தங்க திட்டமிடப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கொக்கிளாய் கடலோரப் பகுதிகளில் தங்கியிருப்பார்கள். 

மேலும் சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சுற்றுலாத் திட்டம் இன்று முதல் ஜனவரி 24ஆம் திகதிவரை செயல்படுத்தப்படும்.

இந்த ஒழுங்குமுறை திட்டத்தின் வெற்றியை ஆய்வு செய்த பின்னர், ஜனவரி இறுதியில் விமான நிலையம் அதிகாரபூர்வமாக மீண்டும் திறக்கப்படும்.

வணிக விமானங்களை தொடங்க விமான நிறுவனம் தயாராக உள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்படுவதால், 

அவர்கள் ஊடாக கோரோனா வைரஸ் கொத்தணி ஏற்படும் என யாரும் பயப்படக்கூடாது.

சுற்றுலாப் பயணிகள் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், சம்பந்தப்பட்ட நட்சத்திர விடுதிகளின் ஊழியர்களை 

அதே விடுதிகளில் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்றைய தினம் வருகை தந்தவர்களுக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.