SuperTopAds

சீனாவில் மீண்டும் கொரோனா!! -அவசர நிலை பிரகடனம்: கட்டுப்படுத்த அரச அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து-

ஆசிரியர் - Editor II

சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் பீஜிங்கில்  21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பீஜிங் நகரில் கொரோனா பரவலைத் தடுக்க அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது விடுமுறை காலம் என்பதால் கொரோனா தொற்று பரவலை தடுக்க சீனா இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் பீஜிங்கில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.