SuperTopAds

கேகாலை மருத்துவரின் ஆயுள்வேத மருந்தை குடித்தவருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I

கேகாலை மருத்துவரின் ஆயுள்வேத மருந்தினை பயன்படுத்திய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வரக்காபொல பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளம காணப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் ஒருவர் கேகாலை மருத்துவரின் மருந்தினை பயன்படுத்தியவர் என 

சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உடுக்கும்புர ஒதனப்பிட்டியவை சேர்ந்த அந்த நபர் உட்பட 12 நோயாளிகள் 

வரக்காபொல பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஆடைதொழிற்சாலையை சேர்ந்த மூன்று ஊழியர்கள் காணப்படுகின்றனர்.

இவர்கள் அனைவரும் கிசிச்சை நிலையங்களிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.