25 மில்லியன் டோஸ் கொவிட் -19 தடுப்பூசி வாங்குவதற்கு இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி..!
இலங்கை சுமார் 25 மில்லியன் டோஸ் கொவிட் - 19 தடுப்பூசி வாங்குவதற்கு தேவையான நிதியை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி அதன் முதல் தவணையாக 84 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதி அமைச்சுக்கு வழங்கியுள்ளது.
இதற்கான ஆவணங்கள் பரிமாறி கொண்டன. தேவைக்கேற்ப இந்த தொகையை 200 மில்லியன் அமெரிக்க டெலர்களாக உயர்த்தலாம் என்று நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.