கொவிட் -19 வைரஸ் தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவர துரித நடவடிக்கையில் இறங்கிய ஐனாதிபதி..!
கொவிட் -19 தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டுவருவதை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.
இது குறித்த ஐனாதிபதி ஊடக பிரிவு தகவலின்படி,
கோவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டுவரப்படுவதை விரைவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஐனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கோவிட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடுப்பூசிகள் பற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர்,
குறித்த நாடுகள் மற்றும் இலங்கையின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க
தனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்கவை ஐனாதிபதி நியமித்துள்ளார். தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய மக்கள் குழுக்கள் தொடர்பாகவும்,
அவர்களது தேவை மற்றும் வாழும் சூழலின் அபாயத் தன்மை என்பவற்றின் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
தோட்டங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விடுதிகள் உட்பட - நோய் பரவும் சாத்தியம் அதிகம் காணப்படும், ஆபத்தில் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் பற்றிய தரவுகளை சேகரிக்கவும் ஐனாதிபதி பணித்துள்ளார்.