SuperTopAds

யாழ்.மாவட்த்தில் கட்டாய சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் கட்டுப்பாடினின்றி வெளியே நடமாடுகின்றனர்..! படையினர், பொலிஸார் இன்று முதல் கண்காணிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்த்தில் கட்டாய சுயதனிமைப்படுத்தலில் உள்ளோர் கட்டுப்பாடினின்றி வெளியே நடமாடுகின்றனர்..! படையினர், பொலிஸார் இன்று முதல் கண்காணிப்பு..

யாழ்.மாவட்டத்தில் கட்டாய சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியே நடமாடாமல் தடுப்பதற்காக பொலிஸார் மற்றும் படையினரை கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி விசேட கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் , யாழ்.மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தளபதியின் பிரதிநிதி மற்றும் பிரதேச செயலர்கள், சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டிருந்தனர். 

குறித்த கூட்டத்தில் கருத்து தொிவித்த யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் தற்போதைய நிலைமையில் எமது மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் அத்தோடு சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

5000 பேரை தாண்டியுள்ளது. அத்தோடு தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது குறிப்பாக உடுவில், தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய், கோப்பாய், பிரதேச செயலர் பிரிவுகளில் 

தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அத்தோடு நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிலும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்படுகின்றது. 

நேற்றைய நிலவரத்தின் படி 2275 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 406 குடும்பங்கள் உடுவில்பிரதேசத்திலும் 350 குடும்பங்கள் தெல்லிப்பளையில், 260 குடும்பங்கள் கோப்பாயிலும் 

163 குடும்பங்கள் சங்கானையில் தனிமை படுத்தபட்டுள்ளார்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொதிகள் அந்தந்த பிரதேச செயலர் பிரிவில் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றன. 

அரச சுற்று நிருபத்தின் அடிப்படையில் உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுகின்றது. எப்படியாயினும் தனிமைப்படுத்தலில் உள்ளோர் வெளியில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஆளுநர் கவனம் எடுக்குமாறு தெரிவித்துள்ளார். அதாவது யாழ்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் கட்டுப்பாட்டை மீறி வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு 

அதாவது தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் கட்டுப்பாடுகளை மீறி வெளியே நடமாடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.  சுகாதாரப் பிரிவினர் மற்றும் பொலிஸாரை மீறி அவர்கள் வெளியில் நடமாடுவதை 

அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் எதிர்வரும் நாட்களில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாகவே இன்றைய கூட்டம் அமைந்துள்ளது அதாவது எதிர்காலத்தில் தனிமை படுத்தபட்டவர்கள் 

வெளியில் நடமாடாதவாறு கட்டுப்படுத்துவதற்கு படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் சுகாதாரப் பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முகமாகவே இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் இன்று வரை தொற்று இனங் காணப்படவில்லை. அதைத் தவிர ஏனைய அனைத்து பிரதேச செயலாளர் பிரிவிலும் குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

எனவே அந்தப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர் வெளியில் நடமாடாத வாறு கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலமே ஏனையவர்களுக்கு தொற்று ஏற்படாதவாறு 

நமது மாவட்டத்தை பாதுகாக்க முடியும் எனவே இன்றிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டு ள்ளோர் வெளியில் நடமாடாதவாறு படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் 

தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.