டிரம்பின் அடுத்த நடவடிக்கை என்ன? -நிலைதடுமாறும் அதிகாரிகள்: பென்டகனில் பெரும் குழப்பம்-
டிரம் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப் போகின்றார் என்று ஊகிக்க முடியாத நிலையில் பென்டகனில் குழப்பநிலை காணப்படுவதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சி.என்.என் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அமெரிக்க இராணுவம் தனது பிரதான தளபதி விலகிச்செல்வதை பார்ப்பதற்கு இன்னமும் ஒரு மாதகாலம் உள்ள நிலையில் எஞ்சியிருக்கின்ற நாட்களில் டிரம்ப் என்னசெய்வார் என்ற பதற்றநிலை பென்டகனில் காணப்படுகின்றது.
ஈரான்மீதான தாக்குதல் போன்ற எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டிரம்ப் உத்தரவிடுவாரா? தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் தனது முயற்சிக்கு இராணுவத்தினரை பயன்படுத்த முயல்வாரா என்ற கேள்வி பென்டகனில் காணப்படுகின்றது என்று அந்த செய்திகள் மேலும் தகவல் தெரிவிக்கின்றன.