முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கடற்கொந்தளிப்பு - 3 மீனவர்கள் மாயம்!

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது