SuperTopAds

பைசர் மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்ட ஜோ பைடன்!!

ஆசிரியர் - Editor II
பைசர் மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்ட ஜோ பைடன்!!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடனுக்கு கொரோனா வைரசுக்கான தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோசை போட்டுக் கொண்டுள்ளார். 

அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது.

அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார்.