அமெரிக்க தூதரகத்தை நோக்கி திடீர் ஏவுகணைத் தாக்குதல்!!
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி திடீரென எட்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் ஈராக்கின் தலைநகரான பக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி திடீரென ஏவப்பட்ட ஏவுகணைகளே இவ்வாறு ஈராக்கின் பாதுகாக்கப்பட பகுதிக்குள் வீழ்ந்துள்ளது.
குறித்த ஏவுகணைத் தாக்குதல்களினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள், கார்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ள அதேவேளை, ஈராக்கின் இராணுவத்தை சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.