SuperTopAds

மார்டனா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல்!!

ஆசிரியர் - Editor II
மார்டனா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல்!!

அமெரிக்காவில் மார்டனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஸ்யா போன்ற நாடுகளில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவரும் போதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது. 

இந்நிலையில் மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி அவசர பயன்பாட்டிற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. மார்டனா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கும் முதல் நாடு அமெரிக்கா என்ற இடம் பெற்றுள்ளது.