SuperTopAds

லஞ்சம், ஊழல்..! பொதுமக்கள் முறைப்பாடு, 600 ஊழியர்களை அதிரடியாக இடமாற்றிய அரசு..

ஆசிரியர் - Editor I

லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் 600 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்ய திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழககோண் கூறியுள்ளார். இலங்கை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஊழியர்களுக்கு எதிராக பொதுமக்கள் தெரிவித்த 

லஞ்சக் குற்றச்சாட்டுகளைக் கருத்திற்கொண்டு இந்த இடமாற்றத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் விடயதானத்துக்குரிய 

அமைச்சருக்கு இடையிலான கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்த இந்த இடமாற்ற உத்தரவு அமுலுக்கு வருவதாகவும் சுமதித் அலககோன் மேலும் தெரிவித்துள்ளார்.