SuperTopAds

கொரோனா தடுப்பூசி போட்ட ஒருவருக்கு தீவிர ஒவ்வாமை!! -அமெரிக்காவில் எழும் புதிய சிக்கல்-

ஆசிரியர் - Editor II
கொரோனா தடுப்பூசி போட்ட ஒருவருக்கு தீவிர ஒவ்வாமை!! -அமெரிக்காவில் எழும் புதிய சிக்கல்-

அமெரிக்காவில் ஒருவருக்கு பைசர் கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களிலேயே தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அலாஸ்காவில், பைசர் கொரோனா தடுப்பூசியால் தீவிர அலர்ஜி ஏற்பட்ட நபர், இதற்கு முன்னர் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர் இல்லை என்று அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளது.

தீவிர ஓவ்வாமை ஏற்பட்டவுடன் அதற்குரிய மருந்து கொடுக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட நபர் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் பிரித்தானியாவில் இதேபோல இருவருக்கு தீவிர ஓவ்வாமை ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட உணவு அல்லது மருந்துகளால் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.