SuperTopAds

கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை!! -யுனிசெப் வலியுறுத்தல்-

ஆசிரியர் - Editor II
கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை!! -யுனிசெப் வலியுறுத்தல்-

ஆசிரிய நாட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

கொரோனா தொற்றுக் காரணமாக உலகெங்கிலும் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்யலாம்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.