SuperTopAds

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்!! -ஒப்புதல் வழங்கி ஜனாதிபதி அதிரடி முடிவு-

ஆசிரியர் - Editor II

பாகிஸ்தானில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனைக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். 

அத்துடன் பாலியல் பலாத்கார வழக்குகளை 4 மாதங்களில் முடிவுறுத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

பாகிஸ்தானில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அக் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தீவிர ஆலோசனை மேற்கொண்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் கார் பழுதடைந்து நின்றபோது அதில் பயணம் செய்த பாகிஸ்தான் பெண் ஒருவர் தனது குழந்தைகள் முன்பாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். 

இதற்குப் பாகிஸ்தான் முழுவதும் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் வழி வகை செய்யும் அவசர சட்டத் திருத்தத்துக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்திருத்த யோசனை அந்நாட்டு ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதனைப் பரிசீலித்த ஜனாதிபதி இதற்கு இன்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

மோசமான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இரசாயனம் மூலம் ஆண்மையை நீக்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது.

அதேபோன்று அவசர சட்டத்தின்படி பாலியல் குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில், சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் 4 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் வேண்டும் என இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

மேலும் பாலியல் வன்முறைகளில் பாதக்கப்படும் நபர்களின் அடையாளங்களை வெளியிடுவதும் இந்தத் சட்டத்திருத்தத்தின் மூலம் குற்றமாகக் கருதப்படும்.

இந்தப் புதிய சட்டத்திருத்தத்தக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அடுத்துவரும் 120 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தை கூட்டி இந்த அவசர சட்டத்தை சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.