வாகனங்களின் இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் குறியீடு இனி இருக்காது..! அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது..

ஆசிரியர் - Editor I

இலங்கையில் மோட்டார் வாகனங்களின் இலக்க தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் குறியீடுகளை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கின்றது. 

மோட்டார் வாகனங்கள் மாகாணங்களுக்கிடையில் விற்பனை செய்யப்படும்போது மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தீர்ப்பதற்காக, 

அமைச்சினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்திருக்கின்றது. வாகனங்களின் புகைப் பரிசோதனைகள் மற்றும் வருடாந்திர வருவாய் உரிமம் வழங்கல் ஆகியவற்றில் எளிதாக இருப்பதற்காக 

வாகனங்களை பதிவு செய்யும் போது மாகாணங்களை அடையாளம் காண்பதற்கான எழுத்துக்கள் வாகன இலக்கத்தகடுகளில் சேர்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஒவ்வொரு முறையும் வாகனங்களின் உரிமை மாகாணங்களுக்கு இடையில் மாற்றப்படும் போது இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும்போது 

வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் என இரு தரப்பும் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு தனித்துவமான எண் வழங்கப்படுவதால், 

ஒவ்வொரு வாகனத்தின் அடையாளத்தையும் துறை சார்ந்த தரவுத் தளத்தில் எளிதாக அடையாளம் காண முடியும். அவற்றைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகளை வழங்கும்போது 

மாகாணத்தைக் குறிக்கும் எழுத்துக்களை அகற்றவேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு