SuperTopAds

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மகிழ்ச்சியான செய்தி..! விமான நிலையங்கள் திறப்பு, 7 நாட்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தல், அரசு அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I

சுற்றுலா பயணிகளுக்காக நாடு திறக்கப்படவுள்ளதுடன், விமான நிலையங்களும் திறக்கப்படவுள்ள நிலையில் வெளிநாட்டவர்களுக்கு 7 நாட்கள் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல். என அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. 

ஆனால் சுற்றுலா பயணிகள் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கில் உள்ள கடலோரப் பகுதிகளிற்குள்ளேயே தங்க வைக்கப்படுவார்கள். பொருளாதார மீளெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கு பொறுப்பான 

ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுலாத் துறைக்கு நாடு மீண்டும் திறக்கப்படுவது குறித்த விவரங்கள் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டன. 

அதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஜனவரி இரண்டாவது வாரத்திலிருந்து விமான நிலையம் திறக்கப்பட்டு அனுமதிக்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

தேவையான சுகாதார வழிகாட்டுதல்களை வரைவதற்கு சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் சுற்றுலாத்துறை இந்த ஆண்டுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டன. 

இந்த ஆண்டு மட்டும் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர் (ரூ .500 பில்லியன்) வருவாய் இழப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 

1- வரும் சுற்றுலாபயணிகள் அவர்கள் மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள். தெரிவுசெய்யப்பட்ட 58 ஹோட்டல்களில் ஒன்றில் தங்குவார்கள் என்று சுற்றுலா அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2- வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு ஏழு மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட பி.சி.ஆர் எதிர்மறை (Negative) சோதனை அறிக்கையுடன் வர வேண்டும், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் மட்டுமே தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள். 

3- இரண்டாவது பி.சி.ஆர் சோதனைக்காக விமான நிலையத்தில் காத்திருப்பதற்கு பதிலாக அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட ஹொட்டல்களிற்கு நேரடியாக செல்ல முடியும். 

4- ஹொட்டலில், தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனை சுற்றுலா பயணிகளிற்கான இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்ளும், விருந்தினர்கள் அடுத்த ஏழு நாட்களுக்கு ஹோட்டலில் தங்க வேண்டும்” 

5- ஏழு நாட்களுக்குப் பிறகு, அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் அதுவும் குறிப்பிட்ட குழுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மடடுமே. 

6- தெற்கு கடற்கரை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலுள்ள ஹொட்டல்கள் சுற்றுலா பயணிகள் தங்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

7- இந்தத் திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகள் முதல்வாரத்தில் கடற்கரையை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள்.இந்த பகுதிக்குள் உள்ளூர்வாசிகள் நுழைவதைத் தடுக்க இராணுவம் நிறுத்தப்படும். 

8- சுற்றுலா பயணிகள் தங்கும்ஹொட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படும். அவர்கள் ஹொட்டலை விட்டு வெளியேறி வீடு திரும்ப முடியாது. 

10- அனுமதிக்கப்பட வேண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தனியார் துறையால் எத்தனை பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்தது” 

11- ஒரு கொரோனா தொற்றாளர் கண்டறியப்பட்டால், அவர் தேவையான பணம் செலுத்துவதன் மூலம் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை அல்லது கொத்தலவாலா பாதுகாப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.