SuperTopAds

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 20 நாட்களான சிசுவின் உடல் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் எரிக்கப்பட்டதா..? கண்ணீர் வடிக்கும் பெற்றோர்..

ஆசிரியர் - Editor I

கொரோனா தொற்றினால் உயிரிழந்த 20 நாட்களான சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு லேடி றிட்ஸ்ஜ்வே வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோரின் ஒப்புதல் இல்லாமலேயே சடலத்தை தகனம் செய்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். 

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 8 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட கொழும்பு-15 பெர்குசன் பகுதியை சேர்ந்த 20 நாள் குழந்தை நிமோனியா காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 

பின்னர் பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்று என உறுதியானது. இதனையடுத்து பின் உயிரிழந்த குழந்தையை தகனம் செய்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.உடலை எரிக்க கையொப்பம் வைக்க மாட்டோம். 

என்று அந்தப் பிஞ்சுக் குழந்தையின் பெற்றோர் மறுத்த நிலையில் எரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வைத்தியசாலை பணிப்பாளர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், குழந்தையின் உடலைக் குடும்பத்தினர் பொறுப்பேற்கத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளார். 

எனினும் குழந்தையின் குடும்பத்தினர் தமது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையை அடக்கம் செய்யுமாறு கோரியுள்ளனர். இதுகுறித்து தந்தை கருத்து தெரிவிக்கையில்- குழந்தைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டதிலிருந்து 

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார். குழந்தைக்கு எப்படி கொரோனா தொற்றியது என்பதை வைத்தியர்கள் தெரிவிக்கவே இல்லை.குழந்தையைப் பார்க்காமல் சில ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்று 

மருத்துவர்கள் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தினர்.எனினும் குழந்தையைப் பார்க்காமல் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்ததாகக் கூறி, தன்னிடம் மருத்துவமனை அதிகாரிகள் பின்னர் தனது இல்லத்தில் இரண்டு ஆவணங்களை தந்ததாக கூறினார்.

ஒரு ஆவணத்தில் குழந்தை COVID-19 க்கு சாதகமாக சோதனை செய்ததை உறுதிப்படுத்தும் விவரங்கள் இருந்தன, மற்றொன்று கொரோனா என கையொப்பமிட்ட குழந்தையின் இறப்பு சான்றிதழ், அவர் கூறினார். 

குழந்தைக்கு ஜனாஸா தொழுகையும் நடத்தவில்லை. எல்லாமே பலாத்காரமாகவே நடந்தது. எரித்த பின்னர் குழந்தையின் சாம்பலை தந்தார்கள். நாங்கள் சாம்பலை வாங்க மறுத்துவிட்டோம்.இப்போது குழந்தையே இல்லை. 

எமக்கு சாம்பல் எதற்கு...? எங்கும் முறையிடவும் இல்லை. இப்போது குழந்தையே இல்லை. முறையிட்டும் என்ன பயன்...?குழந்தையின் தாயாரும் மிகுந்த வேதனையில் உள்ளார்.