SuperTopAds

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்களை திறக்க அரசு நடவடிக்கை, திகதியும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்..!

ஆசிரியர் - Editor I

சுற்றுலா பயணிகளுக்காக ஜனவரி 1ம் திகதிக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக தொியவருகிறது. 

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க 2020 வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தின் போது இந்த விடயத்தை தொிவித்திருகிறார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் எப்போது திறக்கப்படும் என்பதை அனைவரும் அறிய ஆவலாக உள்ளனர். ஜனவரி 1 ஆம் திகதிக்குள் திகதியை அறியத்தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார அதிகாரிகள் பச்சை விளக்கு காட்டியவுடன் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த விரும்பாததால் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறப்பதை அரசு தாமதப்படுத்திவருகிறது என்றார் அமைச்சர்.

மக்கள் என்ன சொன்னாலும் நாங்கள் இப்போது கொரோனா வைரஸுடன் வாழ வேண்டும். எனவே சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 

விமான நிலையத்தை மீண்டும் திறக்க நம்புகிறோம், என்றார். வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 50,000 இலங்கையர்களை அரசாங்கம் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மேலும் 40,000 இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.