உலகில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி!! -முதலாவதாக போட்டு கொள்ளப்போகும் 87 வயது முதியவர்-
இங்கிலாந்து முழுவதும் இன்று செவ்வாய்க்கிழமை பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட உள்ளது.
இந்நிலையில், அங்கு பயன்பாட்டிற்கு வரும் கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போட்டப்படுகிறது என்ற கேள்வியும், ஆர்வமும் உலகம் முழுவதும் உள்ளவர்களிடம் எழுந்தது.
அந்த கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கு கொரோனா தடுப்பூசியை முதலில் போட்டுக்கொள்பவர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 87 வயது நிரம்பிய முதியவர் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்தின் டைனி மற்றும் வெர் பகுதியில் வசித்துவரும் 87 வயதான இந்திய வம்சாவளி முதியவர் ஹரி சுக்லா பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை முதலில் எடுத்துக்கொள்பவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.