SuperTopAds

பொலிஸ் மா அதிபரை சுடப்போவதாக மிரட்டல்!! -புலிகளின் தளபதியை தேடும் பொலிஸ்-

ஆசிரியர் - Editor II

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி எனக் கூறி, பொலிஸ் மா அதிபரை சுடப்போவதாக அச்சுறுத்திய ஒருவரை மலேசிய பொலிஸார் தேடி வருகின்றனர்.

தேடப்படும் நபர், புக்கிட் அமன் பொலிஸ் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சை தாக்கவுள்ளதாக ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல்களை அனுப்பியிருந்தார் என அந்நாட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒருவரிடமிருந்து பொலிஸ் மா அதிபருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அடங்கிய மின்னஞ்சலைப் பெற்றதாகவும் அவர் இலங்கையில் தாக்குதல்களை தொடங்கப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளதாகவும் கூறி பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.