SuperTopAds

கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி இங்கிலாந்து வந்தது!! -விரைவில் வைத்தியசாலைகளுக்கு-

ஆசிரியர் - Editor II

இங்கிலாந்திற்கு பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி வந்தடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி பிரத்தியேகமான ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

பைசர் பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியின் 40 மில்லியன் சொட்டுக்களை இங்கிலாந்து முன்பதிவு செய்துள்ளது. இது 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட போதுமானது.

இந்நிலையில் நாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசியின் முதல் தொகுதி ஆபத்தான முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் தெரிவித்துள்ளார்.