தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி கூட்டாக எதிர்ப்பு..! யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு படுதோல்வி..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி கூட்டாக எதிர்ப்பு..! யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு படுதோல்வி..

யாழ்.மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 24 எதிரான வாக்குகளால் படுதோல்வியடைந்திருக்கிறது. ஆதரவாக 17 வாக்குகள் பதிவாகியிருக்கின்றது. 

தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.டி.பி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் அடங்கலாக 24 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 

இதேவேளை தமிழ்தேசிய கூட்டமைப்பு, கூட்டணி மற்றும் ஐக்கியதேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் அடங்கலாக 17 பேர் ஆதரவாக வாக்களித்தனர். 

முன்னதாக மாநகரசபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்டபோது சபையில் வாக்கெடுப்பு கோரப்பட்டது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பா? பகிரங்க வாக்கெடுப்பா? 

என்பதை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பில் பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக பலர் வாக்களித்தனர். இதனையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 

இந்நிலையில் 24 வாக்குகளால் பாதீடு படுதோல்வியடைந்துள்ளது. மேலும் 45 உறுப்பினர்கள் கொண்ட சபையில் 43 உறுப்பினர்கள் மட்டுமே சபையில் பிரசன்னமாகியிருந்தனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு