யாழ்.போதனா வைத்தியசாலை பீ.சி.ஆர் முடிவுகள் செல்லுபடியற்றதா..? வெளிநாடு செல்வோர் விமான நிலையத்தில் திருப்பி அனுப்படுகின்றனர்..

ஆசிரியர் - Editor I

யாழ்.போதனா வைத்தியசாலையில் செய்யப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் செல்லுபடியாகாது. நவலோகா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளுமாறு விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பபடுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் நின்றவர்களும் வெளிநாடுகளிற்கு பயணிப்பவர்களும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாளங்களிற்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

இந்த நடைமுறைக்கு அமைய வடக்கில் இருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலேயே ஆரம்பத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழுடன் சென்ற நேரம் விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டடனர். 

இருப்பினும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தல் சகிதம் செல்பவர்கள் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றது. அவ்வாறு அனுமதி மறுக்கப்படுபவர்களை கொழும்பில் உள்ள நவலோகா வைத்தியசாலையில் 

பரிசோதனை மேற்கொண்டு அந்த சான்றிதழை பெற்று வருமாறு பணிக்கப்படுகின்றனர். இதற்கமைய நவலோகா வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் ஒருவருக்கு 9 ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு