விவசாயிகள் 110 பேர் படுகொலை!! -பயங்கரவாதிகளின் வெறிச் செயல்-
நைஜீரியாவில் வயல்வெளியில் வேலை செய்த விவசாயிகள் 110 பேர் போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கொடூர முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ் அமைப்பினை நிறுவுவதற்கு போகோ ஹரம் பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் போர்னோ ஸ்டேட் பகுதியருகே அதன் தலைநகர் மைடுகுரியில் உள்ள கோசிப் என்ற கிராமத்தில் பண்ணை நிலங்களில் விவசாயிகள் பலர் வேலையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அவர்களிடம் நெருங்கி வந்த ஒருவன் உணவு தரும்படி கேட்டுள்ளான். அவனை விவசாயிகள் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் பயங்கரவாதிகள் கும்பலாக வந்து விவசாயிகளை கடுமையாக தாக்கி கொடூர முறையில் கொலை செய்துள்ளனர். இதில் 110 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.