கொழும்பு - மஹர சிறைச்சாலையில் மோதல்..! தீ பிளம்பாக மாறியுள்ள சிறைச்சாலை, 4 பேர் சுட்டு கொலை..

ஆசிரியர் - Editor I

கொழும்பு மஹர சிறைச்சாலையில் பாரிய தீ மூண்டுள்ளதுடன் தீ அணைப்பு படை வீரர்கள் தீயினை அணைக்க போராடுகின்றனர். 

தொலைவிலிருந்து பார்க்கும்போது பாரிய தீயை காணமுடிவதாகவும்  துப்பாக்கி சத்தங்களும் கேட்பதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

தற்போதைய நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

அதில் ஒரு தரப்பினர் சிறைச்சாலையினுள் தீ வைத்துள்ளனர். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 

உயிரிழந்த 04 பேரின் சடலங்கள் ராகமை வைத்தியசாலையில் உள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

24 பேர் காயமடைந்துள்ளனர்.

Radio