யாழ்.பல்கலைகழக வாயிலில் இராணுவம், பொலிஸ் குவிப்பு..! மாணவர்களுக்கும் இராணுவம், பொலிஸ் தரப்புக்குமிடையில் முறுகல்..

ஆசிரியர் - Editor I

கார்த்திகை தீப திருநாளான இன்று வழக்கம்போல் யாழ்.பல்கலைகழக வாயிலில் தீபம் ஏற்றுவதற்காக முயற்சித்த மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் தர்க்கம் மூண்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன் வீதியில் மாலை 6 மணிக்கு தீபங்களை ஏற்றுவதற்கு மாணவர்கள் சிட்டிகளுடன் தயாராகியிருந்தனர். 

இதனையடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்த இடத்துக்கு வந்து தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தனர்.

எனினும் மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார், மாணவர்களுக்கு அறிவுறுத்தினர். 

தமது அறிவுறுத்தலை மீறி தீபங்கள் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளன.


Radio