கொரோனா தொற்று உறுதியான நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த இரு கொரோணா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்..!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்று உறுதியான நிலையில் தப்பி ஓடி தலைமறைவாகியிருந்த இரு கொரோணா நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்..!

PCR பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலை செல்லாமல் தப்பி ஓடி கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் பதுங்கியிருந்த இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பு துறைமுக பணியாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லும் வரை வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில் வீடுகளில் இருந்து தப்பி ஓடிய இருவரும் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைந்து தலைமறைவாகியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். 

Radio