தமிழர் தாயகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்..! வீடுகளில், இருப்பிடங்களில் ஈகை சுடரேற்றி அஞ்சலி..

ஆசிரியர் - Editor I

தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு நீதிமன்றங்கள் ஊடாக தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 6.05 மணிக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் மாவீரர்களுக்கான ஈகை சுடர்களை தமது இருப்பிடங்களிலேயே ஏற்றி அஞ்சலிகளை செலுத்தியிருக்கின்றனர். 

மாவை சேனாதிராஜா, சீ.வி.கே.சிவஞானம், வ.பார்த்தீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளிட்ட பலர் வடமாகாணத்தில் இன்றைய தினம் மாவீரர்களுக்கான அஞ்சலிகளை உணர்வுபூர்வமாக செலுத்தியிருக்கின்றனர். 

இராணுவம் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு மிக மோசமான கெடுபிடிகள் மத்தியில் உணர்வுபூர்வமாக தமிழர் தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இதேபோல் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கான அஞ்சலிகள் செலுத்தப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு